க/சரஸ்வதி மத்திய கல்லூரியினுடைய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 10.02.2020 திங்கட்கிழமை அன்று கல்லூரியின் அதிபர் K. S. ரவிச்சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.
மத்தியமாகாண கல்விப் பணிப்பாளர் A.R .சத்யேந்ரா பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார். இதேவேளை விஷேட அதிதிகளாக மலையக மண்ணின் மைந்தர்கள் பதக்கவீரர்கள் M. அஜந்தன் , K. சந்ரதாஸ், T.விஜிந்த், M.மனோகரன் , M.ராஜ்குமார், M.சத்யசீலன், S.பவானிஶ்ரீ, K.சண்முகேஸ்வரன், ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நடேசன் , ராஜலிங்கம்,சேதுகாவலர், ஆகிய இல்லங்களுக்கிடையே இடம்பெற்ற கடுமையான போட்டியில் சேதுகாவலர் இல்லம் முதலிடத்தையும் நடேசன் இல்லம் இரண்டாம் இடத்தையும் இராஜலிங்கம் இல்லம் மூன்றாம் இடத்தையும் தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
யோகரத்னம் விதுஷன்,
பிரியதர்ஷினி
புஸல்லாவ செய்தியாளர்கள்