மடவளை நகரை பிரதிநிதித்துவப் படுத்தும் 14 பிரதேசங்களைச் சேர்ந்த சிறந்த அணிகளுக்கிடையிலான சாம்பியன் யார் என்பதை அறிவதற்கான பலப்பரீட்சை (KUWA) காதிமுல் உம்மா நலன்புரி சங்கத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் 7,8 மற்றும் 9 ம் திகதிகளில் மடவளை மதீனா தேசிய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இந்த சுற்றுப் போட்டியில் ஹரிகன்ஸ் அணியினர் சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டதுடன் ரிச்சர்ட் விளையாட்டுக் கழகம் இறுதிப்போட்டியில் இரண்டாம் இடத்தையும், பிஹிலியங்க கென்ட் அணியினர் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இந்த சுற்றுப் போட்டிகளுக்காக பிரதம அதிதியாக இலங்கை முன்நாள் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முகாமையாளர் திரு பர்வீஸ் மஹ்ரூப் அவர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
-சப்ரான் நஜீர், மாத்தளை-