in ,

அக்குறணை பாலிகாவில் தரம் மூன்று மாணவிகளின் நிகழ்ச்சிகள்

அக்குறணை முஸ்லிம்  பாலிகா மகா வித்தியாலயத்தில்  ஆரம்ப பிரிவைச்  சேர்ந்த தரம் மூன்று  மாணவர்களால்  ” நாம் இலங்கையர் ”  என்ற  பாடப்பரப்பை  அடிப்படையாகக்  கொண்டு  இன்று வெள்ளிக்கிழமை ( 07. 02 . 2020 ) நான்கு மதத்தவர்களின் பண்டிகைகளும் கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வை  தரம்  மூன்று ஆசிரியர்களான  S . M. S  ரஸாணி , J.S  ஸரினா  ,  M . U. F  பைரூஸா ஆகிய ஆசிரியர்களோடு   தொண்டர்  ஆசிரியர்களும்  சேர்ந்து  ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் நான்கு மதத்தவர்களின்  ஆடை , வழிபாட்டுத்தளம் , விஷேட  உணவு வகைகள் , பண்டிகைகள்  என்பன  பற்றி ஆசிரியர்களினால்  மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் விஷேடமாக  V. சந்திரா, M.D.N  ஜயமினி ஆசிரியர்களும்  கலந்து  சிறப்பித்தார்கள் .

நான்கு மதத்தவர்களின் ஆடைக் கலாசாரங்களைக் கொண்டு மாணவர்கள் தங்களை அலங்கரித்திருந்தமை விசேட அம்சமாகும்.

-சுமையா, அக்குறணை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

மடவளை மதீனா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று…

மடவளையில் ஹரிகன்ஸ் அணி சாம்பியன் ஆனது.