in ,

மடவளை மதீனா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று…

கண்டி மாவட்டத்தின் வத்தேகம கல்வி வலையத்திலுள்ள மடவளை மதீனா தேசிய பாடசாலையின் (2020) வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று  வியாழக்கிழமை (2020.02.06) பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக நிப்போன் முகாமைத்துவ பணிப்பாளர் அல்ஹாஜ்  டி .எஸ். எம். எம் நிசாயிஹர், கெளரவ அதிதிகளாக வத்தேகம வலயக்  கல்விப் பணிப்பாளர்- திருமதி  ஏச்.கே விஜேரத்ன, சிறப்பு விருந்தினராக யு.எஸ் .ஏ அரைக்கும் ஆளை( சோ மில்) உரிமையாளர் அல்ஹாஜ்  ஏ. எஸ். எம் கியாஸ் (ஜே.பி), -விக்டோரியா மார்கெட்டிங்  ப்ரைவட் லிமிடெட் தலைவர் அல்ஹாஜ்  தேச கீர்த்தி பெளஸ்z ஏ காதர் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

பாடசாலையின் மினா, சபா(f), ஹிரா இல்லங்கள்  போட்டியிட்டு, ஹிரா இல்லம் 739 புள்ளிகளையும் , மினா இல்லம் 670 புள்ளிகளையும் , சபா( f)இல்லம் 637 புள்ளிகளையும் பெற்றுக்கெண்டனர். மேலதிக 69 புள்ளிகளால் ஹிரா இல்லம்  வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

விளையாட்டுப் போட்டியில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர்மக்கள் கலந்து  கொண்டதோடு,  பாடசாலை  அபிவிருத்திக்குழு , பாடசாலை பழைய மாணவர்கள் சங்கமும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது .

-ஹிஜாஸ் அஹ்மத், மடவளை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

தெல்தோட்டை மலைமகள் இந்துக் கல்லூரியின் பொங்கல் விழா இன்று….

அக்குறணை பாலிகாவில் தரம் மூன்று மாணவிகளின் நிகழ்ச்சிகள்