தொடர்ந்து 3 வது முறையாகவும் கண்டி தெல்தோட்டை க /மலைமகள் இந்து மத்திய கல்லூரியின் ஏற்பாட்டில் 2020 ம் ஆண்டிற்கான பொங்கல் விழா இன்றைய தினம் (2020/2/7) நடைபெற்றது.
பல்லின சமூகமாக ஒண்றிணைந்து மலைமகள் இந்து மத்திய கல்லூரி,
க/தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி, க/கரகஸ்கட மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகள் கரங்கோர்த்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இன,மத வேறுபாடின்றி ஒற்றுமை மனப்பாங்கோடு இந்நிகழ்வு நடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
-சுரேன், தெல்தோட்டை-