in

தெல்தோட்டையில் பாடசாலைகள் இணைந்து நடாத்திய சுதந்திர தின நிகழ்வு.

இலங்கை திருநாட்டின் 72வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கண்டி மாவட்ட தெல்தோட்டை பகுதியில் உள்ள பாடசாலைகளின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட  மாணவர் அணிவகுப்பும்,மதத்தலைவர்களின் ஒன்று கூடல் நிகழ்வும் இன்று புதன்கிழமை (05.02.2020) நடைபெற்றது.

 கலஹா  பொலிஸ் அத்தியட்சகர் உட்பட அதிபர், ஆசிரியர்களின் சங்கமமும் இதில் இடம்பெற்றது.
தெல்தோட்டை  பகுதியில் உள்ள க/மலைமகள் இந்து மத்திய கல்லூரி, க/தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி, க/கரகஸ்கட  மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளின் ஊடாக  மாணவர் அணிவகுப்பு இன்னிசை வாத்திய இசையோடு சிறப்பாக இடம்பெற்றது.
பல்லின சமூகமாக ஒண்றிணைந்து ஒற்றுமை உணர்வோடும் ,சமூக நல்லிணக்கத்தோடும் நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-சுரேன், தெல்தோட்டை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மடவளை பஸார் வரலாற்றில் முதற்தடவையாக…

அஹஸ்வெவ காஹிரா முஸ்லிம் மகா வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி