in

மடவளை பஸார் வரலாற்றில் முதற்தடவையாக…

மடவளை பஸார் வரலாற்றில் முதன் முறையாக (KUWA) காதிமுல் உம்மா நலன்புரி சங்கம் பிரதேச  ரீதியாக சாம்பியன்களுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் லீக் சுற்றுப் போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

மடவளை நகரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் 14 பிரதேசங்களின் சிறந்த அணிகளுக்கிடையிலான சாம்பியன் யார் என்பதை அறிவதற்கான பலப்பரீட்சை இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 7,8 மற்றும் 9 ம் திகதிகளில் மடவளை மதீனா தேசிய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற உள்ளது.

அனைத்து அணிகளும் மிக கடுமையான பயிற்சியுடனும், ஆவலுடனும் இந்த சுற்றுப்போட்டிக்கு தம்மை தயார் படுத்திக் கொண்டு இருக்கின்ற நிலையில் தொடர்ந்து 3 நாட்களுக்கு இந்த சுற்றுப் போட்டி இடம்பெற உள்ளது.

அப்போட்டிகளுக்கான சீருடை அறிமுக (Jersey) நிகழ்வு நேற்று 04/02/2020 மடவளை Guardian திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் சாம்பியன் கிண்ணம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-சப்ரான் நஜீர், வரகாமுறை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அக்குறணை, தெழும்புகஹவத்த முஸ்லிம் வித்தியாலய சுதந்திர தின நிகழ்வுகள்….

தெல்தோட்டையில் பாடசாலைகள் இணைந்து நடாத்திய சுதந்திர தின நிகழ்வு.