in ,

அக்குறணை, தெழும்புகஹவத்த முஸ்லிம் வித்தியாலய சுதந்திர தின நிகழ்வுகள்….

இலங்கை தாய் நாட்டின் 72 வது  சுதந்திர தினத்தை  முன்னிட்டு  அக்குரணை, தெழும்புகஹவத்தை  முஸ்லிம் வித்தியாலயத்தில் சுதந்திர தின கொண்டாட்டமும், மர நடுகை  நிகழ்வும் நேற்று (04.02.2020 ) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .

இந் நிகழ்வை தெழும்புகஹவத்தை மு. ம வித்தியாலயம் , ரஷீதிய்யா அரபுக் கல்லூரி , தக்வா ஜூம்மா பள்ளி  , மற்றும் ரம்யா லங்கா ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

காலை 8.00 மணிக்கு  தக்வா ஜூம்மா பள்ளியிலிருந்து  ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலத்தில் பாடசாலை அதிபர் ஜனாப்  S. H.M   ரியால்தீன் , குல்லியதுல் ரஷீதிய்யா  அதிபர்  அல்ஹாஜ்  A .L .M.  நயீம் , தக்வா ஜூம்மா  பள்ளித்தலைவர்  அல்ஹாஜ்   M. I. M  இக்பால் , ரம்ய லங்கா அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி அஷ்ஷெய்க் அஸ்ரப் ஆகியோருடனும்  தெழும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர்கள் , மாணவர்கள் , குல்லியத்துல்  ரஷீதிய்யா  உஸ்தாத்மார்கள் ,  மாணவர்கள் , தக்வா ஜூம்மா பள்ளி நிர்வாகத்தினர் , மக்தப் மாணவர்கள் , ரம்ய லங்கா  அங்கத்தவர்கள் , பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் , ஊரவர்கள் மற்றும் பல முக்கியஸ்தகர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அக்குரணை  பிரதேச சபைத் தலைவர்  இஸ்திஹார்  இமாமுத்தீன் கலந்து சிறப்பித்தார்.

இவ்விழாவின் இறுதியில்  பாடசாலை வளவில் மூலிகைத் தோட்டமொன்று ஆரம்பித்து  அதில் மரக் கன்றுகள் நடப்பட்டமை விஷேட அம்சமாகும்.

-A. L. F. சுமையா, அக்குறணை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

மாதிபொள அறபா முஸ்லிம் வித்தியாலயத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்….

மடவளை பஸார் வரலாற்றில் முதற்தடவையாக…