இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நேற்றைய தினம் மாதிப்பொளை, 7ஆம் கட்டை , சவனவெளி ஆகிய மூன்று பிரதேசங்களையும் உள்ளடக்கி மாதிப்பொளை அறபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு அதிபர் M.M. ஸியாத் அவர்கள் தலைமை தாங்க விசேட அதிதிகளாக கெதன் கமுவ விகாரை மதகுரு பெல்ஹெர சந்தானந்த தேரர் மற்றும் மாத்தளை ஹலீமியா அரபுக்கல்லூரியின் அதிதி அஷ்ஷெய்க் A.M. அன்வர் மெளலவியும், கெளரவ அதிதிகளாக பல்லேபொலை பிரதேச சபை உறுப்பினர் ஜயபால, கலேவளை பிரதேச சபை உறுப்பினர் உசான், பல்லேபொலை கோட்டக் கல்வி அதிகாரி W.M.P குமாரகம, பல்லேபொலை பிரதேச செயலக நிர்வாக அதிகாரி M.K. ரத்நாயக்க, கலேவளை பிரதேச செயலாளர் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாதிப்பொளை பிரதான வைத்தியசாலை அதிகாரி அஷோக கருணாரத்ன உட்பட ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அலாவுதீன் அஷ்பாக் , மாதிபொளை.