in

உடதலவின்ன ஹகீமிய்யாஹ் அரபுக் கலாசாலையின் சுதந்திர தின நிகழ்வுகள்…..

இலங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் நாடு பூராகவும் இடம்பெற்று வறுகின்றன.

அதனடிப்படையில் கண்டி மாவட்டம் உடதலவின்ன அல்-ஹகீமிய்யாஹ் அரபுக்கல்லூரியில் நிர்வாகக் குழுவின் செயலாளர் அல்-ஹாஜ் ரஷீத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் முதற்கட்டமாக தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் கலாசாலையின் பிரதான மண்டபத்தில் ஆரம்பமாகின. மாணவன் இமாம் முஹம்மட் ஹபீல் அவர்களின் கிராஅத்தோடு ஆரம்பமாகின. நிர்வாகக்குழு செயலாளர் அல்ஹாஜ் ரஷீத் அவர்களால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டதுடன், கல்லூரி அதிபர் அஷ்ஷைக் ஹிதாயதுல்லாஹ் ரஸீன்(ரஹ்மானி) அவர்களால் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து  இந்நிகழ்விற்கு விஷேட அதிதியாக பிறைநிலா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் சப்ராஸ் அபூபக்கர் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்புரையும் நிகழ்த்தினார். பிறைநிலா ஊடக வலையமைப்பு சார்பாக பிறைநிலா உறுப்பினர்களான மௌலவி சஜாத் ,மௌலவி முஆத் மர்சூக், ஷிப்லி கான் ஜவ்பர், அல் ஹாபிழ் அஹமத்,மௌலவி சஜ்லான் ஹகீமி, மௌலவி அப்துல்லாஹ் ஜவாதி, மௌலவி அஸ்லப் மீஸானி, மாத்தளை அஸீம் ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வின்  இறுதியாக பிறைநிலா ஊடக வலையமைப்பு சார்பாக அரபுக்கலாசாலைக்கு  மரக்கன்று ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டதோடு கல்லூரி மாணவர்களுடன் இணைந்து பிறைநிலா உறுப்பினர்கள் கல்லூரி வளாக சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்படத்தக்கது.

முஆத் மர்சூக், கெகிராவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வட்டகொட தமிழ் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி 2020

மாதிபொள அறபா முஸ்லிம் வித்தியாலயத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்….