உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட பழைய மாணவிகளின் மாபெரும் ஒன்று கூடல் (Grand Gathering) நேற்று ஞாயிற்றுக்கிழமை (02.02.2020) பி.ப 2 மணிக்கு பாடசாலை அதிபர் M.S.M. இக்பால் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வொன்று கூடல் நிகழ்வில் பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவிகள் ஓய்வு பெற்ற ஆசிரிய, ஆசிரியைகள், பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாட்டுத் தலைவர் அபூதாலிப், நலன் விரும்பிகள், அரச சேவையில் பணி புரிவோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது பாடசாலையின் அபிவிருத்திக்கு பழைய மாணவிகளின் கடந்த கால பங்களிப்புகள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்கான எதிர்கால திட்டங்கள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-அப்ரா முலாபர், மாத்தளை-