இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாத்தளை பிரதேச செயலாளர் K.P.K.L.P மதுவதி, கௌரவ அதிதிகளாக மாத்தளை கல்வி வலய துணை இயக்குநர் J.M இக்பால் அவர்களும், சிறப்பு விருந்தினராக மாத்தளை கல்வி வலய முஸ்லிம் பாடசாலைகளின் ஒருங்கிணைப்பாளர் M.R.U .ரிழ்வான் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலையின் Zainab, Katheeja, Aysha மற்றும் Fathima இல்லங்கள் போட்டியிட்டு Fathima இல்லம் 95 புள்ளிகளையும், Zainab இல்லம் 141 புள்ளிகளையும், Aysha இல்லம் 144 புள்ளிகளையும், Katheeja இல்லம்154 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டனர். மேலதிகம் 10 புள்ளிகளால் Katheeja இல்லம் வெற்றி பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உற்பட பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
-அப்ரா முலாபர், மாத்தளை-