in ,

நுவரெலியா மாவட்ட அல் அரபா முஸ்லிம் வித்தியாலயத்தில் கழகங்களுக்கிடையில் போட்டி….

நுவரெலியா மாவட்டம் பஹலகொரகோய அல்- அரபா முஸ்லிம் வித்தியாலயத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் இம்முறை சற்று வித்தியாசமாக நடந்து முடிந்தது.

அதனடிப்படையில் இல்லங்களுக்கிடையிலன்றி கழகங்களுக்கிடையில் (KING FISHERS, BLUE WARRIORS, DRAGON WARRIORS) நடைபெற்றமை குறிப்பிடத் தக்கது. 2020 ஜனவரி மாதம் 22ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரையில் இப்போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகள் பாடசாலை அதிபர் T. சலீம் அவர்களின் தலைமையில் ஆசிரியர் குழாத்தின் ஒத்துழைப்புடன் நடந்தது.  22ம் திகதி காற்பந்து போட்டிகளும், 23ம் திகதி வலைப்பந்தும், 24ம் திகதி கபடி போட்டியும், 25ம் திகதி கரம்(carrom) போட்டியும் 28ம் திகதி இறுதிப் போட்டிகளும், சிறார்களுக்கான விளையாட்டுக்களும் நடைபெற்றன.
மொத்தப்புள்ளிகளின் அடிப்படையில் Dragon warriors முதல் இடத்தையும், King fishers இரண்டாம் இடத்தையும், Blue warriors மூன்றாம் இடத்தையும் முறையே பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

-அஸ்பா சரீப்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலயத்தில் கௌரவிப்பு நிகழ்வு இன்று

மாத்தளை ஆமினா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டியில் கதீஜா இல்லம்…..