மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலயத்தின் 2019ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை (2020.02.01) பாடசாலை அதிபர் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் M.L.A.M ஹிஸ்புல்லாஹ் கலந்து சிறப்பித்ததோடு பாடசாலை ஆசிரியர்கள், மாணவிகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் 2019 க.பொ.தா சாதாரண தரம், கா.பொ.தா. உயர் தரம் எழுதி சிறந்த பெறபேறுகளைப் பெற்ற மாணவிகள் உள்ளிட்ட பல துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-ஹமீத், ஏறாவூர்-