கலேவெல கல்வி வலயத்திற்குட்பட்ட கெப்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வைரவிழா இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை (30/1/2020) பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.எம்.ரிஸ்வான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக கலேவெல கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர், சட்டத்தரணி சால்தீன் எம்.சப்ரி கலந்து சிறப்பித்ததோடு வலயத்திற்குட்பட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர்கள், முன்நாள் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவ்வருடம் வைரவிழா காணும் கெப்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முதற்கட்ட நிகழ்ச்சியாகவே இல்ல விளையாட்டுப் போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
-அப்ரார், கலேவெல-