in ,

ஏறாவூர், அலிகார் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி இன்று….

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை (2020.01.31) பாடசாலை அதிபர் S.A நஜீப் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் M.K.M மன்சூர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இப்போட்டியில் பாடசாலையின் Roomy, Iqbal, Umar இல்லங்கள் போட்டியிட்டு Roomy இல்லம் 306 புள்ளிகளையும், Iqbal இல்லம் 350, புள்ளிகளையும், Umar 370 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டது. மேலதிக 20 புள்ளிகளால் Umar இல்லம் அலிகார் தேசிய பாடசாலையின் 2020ம் ஆண்டுக்கான வெற்றி இல்லமாகத் தெரிவானது.

இந்நிகழ்வுக்கு பாடசாலை நிர்வாகக் குழு மற்றும் பழைய மாணவர் சங்கம், அபிவிருத்திச் சங்கம் ஆகியன பூரண உத்துழைப்பை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

-ஹமீத், ஏறாவூர்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

குருநாகல், கும்பலங்க ஹமீதியா பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில்…..

கலேவெல, கெப்பிடிய மு.வி. வைரவிழா இல்ல விளையாட்டுப் போட்டி – 2020