குருநாகல் மாவட்ட கும்பலங்கை ஹமீதியா முஸ்லிம் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (2020.01.31) இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் A.J.M முசம்மில் மற்றும் குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கலாநிதி M.S.M. பாஹிம் அவர்களும், பாடசாலை நிர்வாகக்குழு, மாணவர்கள், பழைய மாணவர் சங்கம், அபிவிருத்திச் சங்கம் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Daimond, Ruby, Garnet ஆகிய இல்லங்கள் போட்டி போட்டதில் அதிகூடிய புள்ளிகளோடு Ruby இல்லம் வெற்றியை தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-ஹஸ்மில், கும்பலங்க-