in

தென் கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நேற்று வியாழக்கிழமை (2020.01.30) பிற்பகல்  4 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவப் பேரவையினால் மிக பிரமாண்டமாக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அட்டாளைச் சேனையில் உருவாக்கப்பட்ட இப்பீடம் பிற்பட்ட காலத்தில் ஒலுவிலிற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந் நிகழ்வின் போது பிரதம அதிதிகளுக்கும் ஏனைய அதிதிகளுக்கும் கலை பீட பீடாதிபதியான பேராசிரியர் திரு அப்துல் ரமீஸ் அவர்களினால் நினைவுச் சின்னங்கள்  வழங்கி கௌரவிக்கபட்டன.

அத்துடன் கலைபீட பீடாதிபதிக்கான நினைவு சின்னங்களும் மாணவப் பேரவை உறுப்பினர்களுக்கான சின்னங்களும் வழங்கப்பட்டன. இதன் முக்கிய அம்சமான கரம், கூடைபந்து, பூப்பந்து, கிரிக்கெட்,  செஸ் போன்ற போட்டிகளில் 1ஆம் 2ஆம் 3ஆம் இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மேடை ஏற்றபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-F. Nisha(SEUSL)-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் மகா வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டுப் போட்டி….

குருநாகல், கும்பலங்க ஹமீதியா பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில்…..