in

தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் மகா வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டுப் போட்டி….

குருணாகல் மாவட்ட, இப்பாகமுவ கல்வி வலய, தல்கஸ்பிடிய அல்- அஷ்ரக் மகா வித்தியாலயத்தின் 2020 ம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள், நேற்று வியாழக்கிழமை (2020.01.30) பாடசாலையின் அதிபர் A.S.M. ஜாபிர் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இப்பாகமுவ வலயக் கல்விப் பணிப்பாளர் நாயகம் திரு. சிறிமேவன் பொடி நிலமே கலந்து கொண்டார்.
விஷேட அதிதிகளாக ரிதீகம பிரதேச கல்விப் பணிப்பாளர் திரு. ரத்நாயக்க, இப்பாகமுவ உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ் மொழிப் பிரிவு) திரு. ரியாஸ் முகமத்,  இப்பாகமுவ உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சலாஹுதீன் மற்றும் குருணாகல் மாவட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.ரிம்சான் ஆகியோரும் கலந்து தங்களது வரவால் நிகழ்வை சிறப்பித்தனர்.

நடைபெற்ற நிகழ்வுகளில் 402 புள்ளிகளை பெற்று Lotus இல்லம் முதலாம் இடத்தை தட்டிக் கொண்டது. 7 புள்ளிகள் வித்தியாசத்தில் Jesmin இல்லம் இரண்டாம் இடத்தையும், 35 புள்ளிகள் வித்தியாசத்தில் Rose இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
இந்நிகழ்வில் Thalgaspitiya News Service (TNS) இன் பூரண அனுசரணையுடன் பழைய மாணவர்களுக்கான நிகழ்வுகளும் நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-செய்தி ஆசிரியர் : அஸ்கா அஸ்வர்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அநுராதபுரம், காகம அரபா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி இன்று….

தென் கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டம்