in ,

பிறைநிலா ஊடக வலையமைப்பின் 2020 ம் ஆண்டுக்கான முதல் ஒன்றுகூடல் நிகழ்வு கண்டியில்….

பிறைநிலா ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த “PIRAINILA Gathering 2020” இல் 20‌ இலக்குகள் எனும் தொனிப்பொருளில் நடத்தப்பட்ட ஒன்று கூடல் நிகழ்வொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (2020-01-26) கண்டி கந்துரட பெண்கள் அமைப்பு காரியாலயத்தில் நடைபெற்றது.

 பிறைநிலா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் சப்ராஸ் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் “பிறைநிலா” ஊடக வலையமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை பயணித்துக் கொண்டிருக்கும் பலர் கலந்து கொண்டனர்.

2020 ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் வேலைத்திட்டங்கள், நடப்பாண்டுக்கான உறுப்பினர் தேர்வு என்பவற்றோடு அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் கலந்தாலோசனை செய்யப்பட்டது.

குறித்த ஒன்று கூடல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட ஊடகத்துறையில் ஆர்வமுள்ள சுமார் 75 உறுப்பினர்கள் நேர்முகத்தேர்வு மூலம் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

நடப்பாண்டுக்கான சில வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் ஆலோசனை செய்யப்பட்டது.

மத அனுஷ்டானங்களோடு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் வரவேற்புரையை பிறைநிலா ஊடக வலையமைப்பு மாணவி Fazooha Dawood நிகழ்த்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஆலோசனைக் குழு உறுப்பினர்களான அஷ்ஷேக் சுல்பி மௌலவி, அஷ்ஷேக் பாயிஸ் மௌலவி ஆகியோர்கள் பிறைநிலா வின் நோக்கத்தை அறிமுகம் செய்தனர்.
பின் பிறைநிலா ஊடகக் கற்கை நெறிகளை நிறைவு செய்த மாணவர்கள் தங்களது ஊடக அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பிறைநிலாவின் உருவாக்கம், பணிகள், திட்டங்கள் சம்பந்தமாக முழுமையான ஆலோசனைகள் பணிப்பளார் மூலம் சமர்ப்பிக்கப்பட்டு சில ஆலோசனைகளும் முன் மொழியப்பட்டது.

இறுதியாக பிறைநிலா அங்கத்தவர் சப்ரானின் நன்றியுரையோடு நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.

நாடுபூராகவும் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிலரே இந்நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-Fazooha Dawood-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பண்டாரகொஸ்வத்த, சுலைமானியா அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா இனிதே நிறைவு பெற்றது.

அநுராதபுரம், காகம அரபா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி இன்று….