in

பண்டாரகொஸ்வத்த, சுலைமானியா அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா இனிதே நிறைவு பெற்றது.

பண்டாரகொஸ்வத்த சுலைமானியா அரபுக் கலாசாலையின் இரண்டாவது பட்டமளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (2020.01.19) கல்லூரியின் அமைப்பாளரும், கண்டி புர்கானியா அரபுக் கலாசாலையின் பணிப்பாளருமாகிய அஷ்ஷேக் H. உமர்தீன் (ரஹ்மானி) தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 2019, 2020 ம் வருடங்களில் குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களுக்கும், ஷரீஆக் கல்வியை நிறைவு செய்த உலமாக்களுக்குமான சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

நிகழ்வில் கலாசாலையின் ஆயுட்காலத் தலைவர் அல்ஹாஜ் A. J. M. மன்சூர், கல்லூரியின் அதிபர் அல்ஹாபிழ், அஷ்ஷேக் M. I. M. கபீர் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்த அதேவேளை நிகழ்வுக்கு விஷேட சொற்பொழிவாளராக Zam Zam நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் யூசுப் முப்தியும், பிரதம அதிதிகளாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் குருநாகல் கிளை தலைவர் அஷ்ஷேக் M. I. சுஹைப் (தீனி) , சியம்பளாகஸ்கொடுவ அந்நூர அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேக் S. D. முனவ்வர் (தீனி), மெல்சிரிபுர உஸ்வதுல் ஹஸனாத் அரபுக் கல்லூரியின் பிரதி அதிபர் அஷ்ஷேக் உபைதுல்லாஹ் (ரஹ்மானி) ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவர்களோடு சுலைமானியா அரபுக்கலாசாலைக்கு பொருளாதார ரீதியில் உதவி ஒத்துழைப்புக்களை வழங்கக்கூடிய தனவந்தர்களும், தொழிலதிபர்களும் பட்டம் பெற்றுச் செல்லும் மாணவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வுகளை பிறைநிலா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் சப்ராஸ் அபூபக்கர் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-சப்ராஸ் அபூபக்கர்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வெற்றிகரமாய் நிறைவு பெற்றது பிறைநிலாவின் புஸல்லாவ பொங்கல் பயணம்

பிறைநிலா ஊடக வலையமைப்பின் 2020 ம் ஆண்டுக்கான முதல் ஒன்றுகூடல் நிகழ்வு கண்டியில்….