மெல்போட் தோட்டத்தில் இருக்கக்கூடிய சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையான அனைவருக்குமான பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு போட்டிகளும் புதுமையாய் இருந்ததோடு ஆர்வத்தோடு போட்டிகளில் பலரும் கலந்து சிறப்பித்தனர். போட்டிகளில் கலந்து வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதேவேளை பிறைநிலா ஊடக வலையமைப்பு மூலம் மூலிகைத் தாவரம் ஒன்று மெல்போட் தோட்டத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. பிறைநிலா ஊடக வலையமைப்பு மூலம் மகேஷ்வரக் குருக்களிடம் இந்த மரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வை வெற்றிகரமாய் செய்து முடித்தமைக்காக புஸல்லாவ மெல்போட் தோட்ட மக்கள் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு பிறைநிலா ஊடக வலையமைப்புக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Safras Aboobakker –