in ,

கட்டணமின்றி ஒன்லைன் கல்வித் திட்டம், அமைச்சர் கோரிக்கை

இ-தக்ஸலாவ திட்டத்தின் மூலம், நாட்டில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் எந்தவொரு இணைய கட்டணமும் இன்றி ஒன்லைன் கற்றலில் ஈடுபட உதவும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தற்போதைய இ-தக்ஸலாவ அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தியிருந்தார். ஜூலை 21 ஆம் திகதிக்குள் 200 மாணவர்களுக்கு இ-தக்ஸலாவ திட்டத்தின் மூலம் இலவசமாக ஒன்லைன் வகுப்புகளை அணுக அனுமதிக்கும் முதல் கட்டத்தை வெளியிடுமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை நேற்று நடைபெற்ற கூட்டத்தில், அரச ஊடக நிலையங்கள் மூலம் ஒரு பிரத்தியேக தொலைக்காட்சி அலைவரிசையும் கல்வி நோக்கங்களுக்காக பிரத்தியேகமாக ஒரு வானொலி அலைவரிசையையும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஒன்லைன் கற்றல் விஷயத்தில் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கும் குழந்தைகளுக்கு ஆதரவளிக்க, பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.(NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

எரிபொருள் விலையேற்றம் ஒரு கூட்டு முயற்சியே

விருதுக்கான பட்டியலில் குமார் சங்ககார