in

அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயத்தில் பிரியாவிடை நிகழ்வு

கிழக்கு மாகாணம், அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயத்தில் கடமை புரிந்த ஆசிரியர் M. I. M. சஹாப்தீன் இன்றைய தினம் தனது ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்கின்றார். அவருடைய சேவையைப் பாராட்டி அவரை வாழ்த்தி வழியனுப்புகின்ற பிரியாவிடை நிகழ்வு இன்று வியாழக்கிழமை (2020.01.09) பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.

பாடசாலை அதிபர் A. M. M. இத்ரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் பாடசாலை ஒருங்கிணைப்பாளரும், PSI இணைப்பாளருமான A. L. பாயிஸ் கலந்து கொண்டதோடு, பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியர் M. I. சஹாப்தீன் (கபூரி) தனது ஆரம்பக் கல்வியை பாண்டிருப்பு அல் மினன் கல்லூரியிலும், உயர்தரத்தை மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியிலும், பட்டப்படிப்பை பேராதனை பல்கலைக் கழகத்திலும், பட்டப்பின் படிப்பை மஹரகம தேசிய கல்வி நிறுவகத்திலும் கற்றார்.   அத்தோடு தனது ஷரீஆக் கல்வியை மஹரகம கபூரிய்யாஹ் அரபுக்கல்லூரியில் நிறைவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

-சப்ராஸ் அபூபக்கர்-
2020.01.09

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அக்குறணை பிரதேச சபையின் 2020 வருட ஆரம்ப நிகழ்வுகள்.

வெற்றிகரமாய் நிறைவு பெற்றது பிறைநிலாவின் புஸல்லாவ பொங்கல் பயணம்