ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க அக்கரைப்பற்று வலயக் கல்விக் காரியாலத்தில் 2020 முதல் நாள் நிகழ்வுகள்.
கொடியேற்றும் வைபத்தோடு நிகழ்வுகள் ஆரம்பமாகியது. தேசியக் கொடியை வலயக் கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் A. M. ரஹ்மதுல்லாஹ் அவர்களும், மாகாணக் கொடியை கல்வி, அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் A. H. பௌஸ் அவர்களும், வலயக் கொடியை திட்டமிடலுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் A. G. பஸ்மில் ஆகியோர்களும் ஏற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்று வலயக் கல்விக் காரியாலய உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2020 ம் ஆண்டுக்கான தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றனர். அதில் நாம் நேர்மையாகவும், பக்கச்சார்பின்றியும், தமது கடமைகளை முன்னெடுப்பதாக முன்மொழிந்து கொண்டனர்.
வலயக் கல்வி அலுவலக பணிப்பாளர் தலைமையில் மரநடுகைத் திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது. பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் இந்தத் திட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் பணிப்பாளர் அவர்களது உரையும் இடம்பெற்றது. அதில் எமது வலயத்தில் உள்ள மாணவர்கள் “நாஸா” வரை செல்ல வேண்டும். அந்த மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை நாம் வழங்க வேண்டும். அதில் நாம் ஒவ்வொருவரும் ஆர்வமாக இயங்க வேண்டும் என பணிப்பாளர் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத் தக்கது.
-சப்ராஸ் அபூபக்கர்-