கண்டி, கலகெதர ஜப்பார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் கல்லூரி அபிவிருத்திச் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஜப்பார் நடை பவணியும், ஒன்றுகூடலும் நாளை சனிக்கிழமை (28.12.2019) காலையிலிருந்து கல்லூரி வளாகத்தில் இடம்பெற உள்ளது.
கல்லூரி அதிபர் பஸால் மொஹமட் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பழைய மாணவ மாணவிகள், முன்நாள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
-பிறைநிலா செய்தி-