மதவாச்சி, மஹாசியம்பலாகஸ்கட அல்-நுஸ்ரத் பாலர் பாடசாலை விடுகை வருட மாணவர்களுக்கான கலைவிழா நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
மஹாசியம்பலாகஸ்கட அல்-அக்ஸா முஸ்லிம் பாடசாலை மண்டபத்தில் பாலர் பாடசாலை ஆசிரியர்களான பெளமியா மற்றும் இரேஸா ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது.
நிகழ்வில் ஜாமிஉல் மஸ்ஜிதில் அப்றார் ஜும்மா பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் அல்-அக்ஸா முஸ்லிம் பாடசாலையின் ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் ஊர் மக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்விற்கு அனுசரனை வழங்க
“பிறைநிலா” ஊடக வலையமைப்பிற்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிறைநிலா பிராந்திய செய்தியாளர்
ஹமீட் மொஹமட் சஜாத் – மதவாச்சி