2015ம் ஆண்டு க.பொ.த. (சா/த) எழுதிய ஆறு பாடசாலைகளினுடைய மாணவர்களின் ஏற்பாட்டில் நிந்தவூர் ஸபா வித்தியாலயத்தில் இரத்ததான முகாம் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான முகாம் நாளை செவ்வாய்க்கிழமை (2019.11.12) காலை 08.30 தொடக்கம் மாலை 04.30 வரை ஸபா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற உள்ளது.
இந்த உயிர் காக்கும் நிகழ்வில் கலந்து சிறப்பித்து உங்களாலான பங்கை வழங்குமாறு ஏற்பாட்டுக் குழு கேட்டுக்கொள்கிறது.
தகவல்: சிப்லி கான்,
பமுனுகம.