அட்டாளைச்சேனை பிரதேச கலாசார பிரிவினால் மீலாத் தினத்தை முன்னிட்டு “அண்ணல் நபியின் அவதாரம் அகிலத்தின் பசுமைக்கு ஒரு வரம் ” எனும் வாசகத்திற்கு அமைவாக மீலாத் கவியரங்கு இன்று வியாழக்கிமை (7) கலாசார உத்தியோத்தர் எம். ஐ. எம். அஷ்ரப் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
பாவோந்தர் பாலமுனை பாறூக் கவியரங்கிற்கு தலைமை வகித்தார். இக் கவியரங்கில் அட்டாளைச்சேனை , பாலமுனை , ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் , மூத்த எழுத்தாளர்கள் கலந்து கவி பாடினர். அத்துடன் இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோத்தர் தஸ்லிம் முஹம்மட் ரிஸான், மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் நளில், கிராம சேவை உத்தியோகத்தர் நளீர் அகியோர் கலந்து சிறப்பித்தனர். கவியரங்கில் கலந்து சிறப்பித்த கவிஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.ஆதிக்