தென்கிழக்குப் பல்கலைக்கழக புவியியல் பீட மாணவர்களின் பொலித்தீன், பிளாஸ்ட்டிக் அற்ற கடற்கரைச் சூழல் நிகழ்ச்சித் திட்டம்.
…………………………………….
எம்.எஸ்.ஆதிக்
உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தினை முன்னிட்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியல் மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் அற்ற கடற்கரைச் சூழலை உருவாக்கும் பயணம்” இன்று (2019.11.05) செவ்வாய்கிழமை காலை 9 மணியளவில் பல்கலைக்கழக கடற்கரைச் சூழலில் இடம் பெற்றது.
இந்த நிழ்வானது மாசுபடும் கடற்கரைச் சூழலை பாதுகாக்கும் தொடர் பயணத்தின் முதல் படியாக இடம் பெற்றது. இது பல்வேறு நிகழ்வுகளை கொண்டதாக அமைந்தது.
இதில் முக்கியமாக
1.கடற்கரை சிரமதானம்
2.கடற்கரையை அண்டிய பகுதிகளில் மூடு தாவரங்கள் நடல்
3. கடற்கரைச் சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வுப் பதாகைகள் அமைத்தல்
போன்ற பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டதாக இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார, பீடாதிபதி ரமீஸ் அபூபக்கர் அவர்களும் மற்றும் முன்னாள் பீடாதிபதி பௌசுல் அமீர் அவர்களும் புவியியல் துறை தலைவர், விரிவுரையாளர் றினோஸ் அவர்களும் புவியியல் துறை பேராசிரியர் எம்.ஐ.எம் கலீல் அவர்களும் மற்றும் ஏனைய புவியியல் துறை விரிவுரையாளர்களும் மற்றும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.