in ,

இம்மாத ஜும்மா குத்பா தொடர்பில் அ. இ. ஜ. உலமா சபையின் அறிவித்தல்

நபி முஹம்மது ( ஸல் ) அவர்கள் பிறந்த புனித மாதமான ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினால் எதிர் வரக்கூடிய நான்கு ஜும்மா பிரசங்கங்களையும் பின்வரும் தலைப்புகளில் அமைக்குமாறு கதீப்மார்களையும், பள்ளி நிர்வாகிகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.

( 08.11.2019) நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கை

(15.11.2019) நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கை

(22.11.2019) நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் நற் பண்புகள்

(29.11.2019) நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள்

மேலும் மஸ்ஜித் நிர்வாகிகள் மேற் குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகளில் ஜும்மா பிரசங்கங்களை ஏற்பாடு செய்யுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரசாரக்குழு செயலாளர் கே.எம். முர்ஷித் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

பிறை நிலா செய்தியாளர்
ஹமீட் முஹமட் சஜாத் ( மதவாச்சி)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

தெஹிவளையில் பாடசாலை மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு.

தென்கிழக்குப் பல்கலைக்கழக புவியியல் பீட மாணவர்களின் பொலித்தீன், பிளாஸ்ட்டிக் அற்ற கடற்கரைச் சூழல் நிகழ்ச்சித் திட்டம்.