கொழும்பு, பாத்திமா மகளிர் கல்லூரியில் 2019.10.26 ம் திகதி வலய மட்டம் தெரிவு செய்யப்பட்டு பின் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அகில இலங்கை ரீதியான போட்டியாக இந்தப் போட்டிகள் நடைபெற்றது.
இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மூலம் நடைபெற்ற இப்போட்டிகளின் இறுதி முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதனடப்படையில் எமக்கு அறிவிக்கப்பட்ட தகவலின் படி கண்டி மாவட்டம், அக்குறணை குருந்துகஹஎல முஸ்லிம் வித்தியாலய மாணவி உமைமா ஹுசைன் குர்ஆன் மனனப் போட்டியில் இரண்டாம் இடத்தை தனதாக்கிக் கொண்டார். இவர் மாவதுபொல, அலவதுகொட ஹுசைன் ஹாபிஸ் ன் புதல்வியாவார். இவரது திறமைகளை ஏற்கனவே நாம் எமது “பிறைநிலா” ஊடக வலையமைப்பு மூலம் வெளிக்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
குருநாகல் மாவட்டம், கிரியுல்ல கல்வி வலய நூரானியா மகா வித்தியாலய மாணவி M. F. F. ஆலா ஆரம்பப்பிரிவு தமிழ் பேச்சுப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். இவர் கிரியுல்ல கல்வி வலய தமிழ் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் S. L. M. பாயிஸ் அவர்களின் புதல்வியாவார்.
அதேபோல் வரலாற்றில் முதற்தடவையாக கிரியுல்ல கல்வி வலய தொரணேகெதர முஸ்லிம் வித்தியாலய மாணவி M. N. F. ஆயிஷா சிங்கள மொழி பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
போட்டியில் கலந்து வெற்றிகளை தனதாக்கிய ஏனைய மாணவர்களுக்கும் “பிறைநிலா” ஊடக வலையமைப்பின் ஆத்மார்த்தமான வாழ்த்துகள்.
சப்ராஸ் அபூபக்கர்