in

இளம் சமாதான ஊடகவியலாளர்களுக்கான ஊடகப் படையணி பயிற்சித் திட்டம் 2019

இளம் சமாதான ஊடகவியலாளர்களுக்கான 5 நாட்கள் சமாதான ஊடக படையணி பயிற்சித் திட்டமானது அக்டோபர் 22 ஆம் திகதி நீர்கொழும்பில் வெற்றிகரமாக நடந்ததேறியது.

சமாதான ஊடகப் படையணி பயிற்சித் திட்டம் என்பது ஒரு புதுமையான திட்டமாகும். இது வழக்கமான கதை சொல்லலிருந்து பாரம்பரிய தடைகளை உடைக்க இளம் பத்திரிகையாளர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. குறிப்பாக பிரதான ஊடகங்களால் தவிர்க்கப்பட்டிருந்த, ஓரங்கட்டப்பட்ட மக்களின் கதைகள், மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் கதைகளையும் தெறிவிக்க வழிகள் அமைகின்றது. இந்த பயிற்சிப் பட்டறையில் 2018 இல், 70 க்கும் மேற்பட்ட மல்டி மீடியா கதைகளை தயாரித்த 34 இளம் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளதோடு மட்டுமில்லாமல் மேலும் 24 கூட்டாளர்கள் இலங்கையின் பல்வேறு பாகங்களில் மாறுபட்ட கலாசார புரிதலை அனுபவித்து வருவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் அவர்கள் வெகு விரைவில் 62 க்கும் மேற்பட்ட மோஜோக்களை தயாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமாதான ஊடக படையணியின் மூன்றாவது பகுதி 34 இளம் ஊடகவியலாளர்களை கொண்டு, வெவ்வேறு இன மற்றும் மொழியியல் பின்னணியைச் சேர்ந்தவர்களோடு நடாத்தப்பட்டது. (சிங்கள -18, தமிழ் -10 மற்றும் முஸ்லீம் -6). இதில் 18 பெண்கள் மற்றும் 16 ஆண்களும் அடங்குவார்கள்.
இந்த ஐந்து நாள் பயிற்சித் திட்டமானது அக்டோபர் 18 ஆம் தேதி துவக்க விழாவுடன் ஆரம்பமானது. இதில் SDJF நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் கலாநிதி வனிகசுந்தர மற்றும் SDJF நிறுவனத்தின் திட்ட இயக்குநர் ஜனாப் முகமது ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் கலாநிதி வனிகசுந்தர கூட்டாளர்களுக்கு ஆற்றிய உரையில் “இலங்கையில் உள்ள பத்திரிகையாளர்கள் சிறிய அடி எடுத்து வைத்து அபிவிருத்தி பத்திரிகையாளர்களாக முன்னேறி, நாட்டில் பல்வேறு சமூகங்களில் இருக்கும், தெரிவிக்கப்படாத பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்தார்.

பன்முகத்தன்மை மற்றும் பன்மைவாதம், அமைதி மற்றும் கருத்து வேற்றுமை பற்றிய உணர்திறன் கொண்ட இதழியல், பாலின உணர்திறன் கொண்ட இதழியல், ஊடகத்துறைக்கான சமூக வலைத்தளங்களின் பாவனை, அத்தோடு MoJo பாவனை பற்றிய நடைமுறை அமர்வுகள், மற்றும் கதை தயாரிப்புக்கான முதன்மை கருவியாக MoJoவை எப்படி பயன்படுத்துவது என்ற செயலமர்வுடன் அடிப்படை காட்சிகளின் வகைகள், காட்சிகள், கேமரா கோணங்கள் உள்ளிட்ட காட்சி வழி கதை சொல்லல் பற்றிய நுணுக்கங்களோடு Kinemaster என்ற செயலியை கொண்டு எப்படி படத்தொகுப்பு செய்வது பற்றி இந்த 5 நாள் பயிற்சிப்பட்டறையில் கற்பிக்கப்பட்டது.

பயிற்சித் திட்டத்திற்குப் பிறகு, கூட்டாளர்கள் தங்கள் ஊடக படையணி கூட்டாளருடன், தமது சொந்தத்திலிருந்து வேறுபட்ட ஒரு சமூகத்தில் ஒரு வாரம் செலவிட்டு கூட்டாக மல்டிமீடியா மற்றும் மொபைல் கதைகளை உருவாக்குவார்கள். அவர்களின் களப்பணி செயல்முறைக்கு உதவ தொலைநிலை வழிகாட்டலோடு ஒரு தொகையையும் பெறுவார்கள்.

USAID ஆதரவுடன், சர்வதேச ஆராய்ச்சி பரிவர்த்தனை வாரியம் (IREX) ஜனநாயக இலங்கைக்கான ஊடக வலுவூட்டலின் (MEND) ஒரு பகுதியாக இந்த திட்டத்தை இலங்கை மேம்பாட்டு பத்திரிகையாளர்  மன்றம் (SDJF) ஏற்பாடு செய்தது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வெற்றிகரமாய் நிறைவு பெற்றது அக்குறணை KM PREMIER LEAGUE 2019

தேசிய மீலாத் போட்டியில் உமைமா, ஆலா, ஆயிஷா ஆகியோரும் பங்குபற்றி வெற்றி பெற்றனர்.