அக்குறணை, அம்பத்தன்ன, முதலாம் கட்டை Darul Cricket Club ஏழாவது தடவையாக ஏற்பாடு செய்த மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி (KM PREMIER LEAGUE) அண்மையில் அக்குறணை “தாருல்” விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இப்போட்டியில் 30 க்கு மேற்பட்ட அக்குறணை பிரதேசத்தை சேர்ந்த அணிகள் பங்குபற்றின. இருப்பினும் இறுதிச் சுற்றுக்கு KM All Star அணியும், KM Strikers தெரிவாகியதில் KM All Star அணி வெற்றியைத் தனதாக்கி வெற்றிக் கேடயத்தை சுவீகரித்துக் கொண்டது.
நிகழ்வுக்கு சிறப்பதிதிகளாக பிரதேச பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களும், அனுசரணையாளர்களும், ஊர் மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வுக்கு “பிறைநிலா” வலையமைப்பு ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.