சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிறைநிலா ஊடக வலையமைப்பின் ஊடக அனுசரணையில் கண்டி மாவட்ட கந்துரட்ட பெண்கள் அமைப்பினால் நடாத்தப்பட்ட சிறுவர் தின சித்திரப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமும், சர்வமத நல்லிணக்க விழாவும் நேற்று திங்கட்கிழமை கண்டி பெண்கள் அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், சர்வ மத தலைவர்கள், கண்டி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் மற்றும் Pearls Paradise அநாதைகள் இல்லத்தின் பணிப்பாளர் ஜனாப் ஷாஜகான் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வுக்கு “பிறைநிலா” ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.