in ,

புத்தளம், உடப்பு பகுதியில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் பலி

புத்தளம் – உடப்பு – பள்ளிவாசல்பாடு பிரதேசத்தில் தந்தை மற்றும் இரண்டு மகன்மார் ஆகியோர் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவல்துறையின் 119 என்ற இலக்கத்திற்கு இன்று கிடைத்த தகவலுக்கு அமைய காவல்துறையினர் குறித்த பிரதேசத்திற்கு விரைந்துள்ளனர்.
இதன்போது, குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில், கழுத்தில் சுருக்கிட்டு தந்தை உயிரிழந்துள்ளதோடு, அவரது இரண்டு மகன்களும் விசம் அருந்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, குறித்த மகன்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
31 வயதுடைய தந்தையும், 9 மற்றும் 6 வயதுகளை உடைய இரண்டு மகன்மார்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தந்தையின் சடலமானது சம்பம் இடம்பெற்ற வீட்டில் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதோடு, குறித்த இரண்டு சிறுவர்களினதும்  சடலங்கள் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான நீவதான் விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, உடப்பு காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 
-Capital News –

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கோட்டாபயவுக்கு வாக்களிப்பவன் உண்மையான தமிழனா? சீ.வி. விளக்கம்.

சஜித் தான் எனக்கும் பிடிக்கும் – மஹிந்த ராஜபக்ஷ