உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி, கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்று இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவரான ஸஹ்ரான் ஹாஷிமின் மரண விசாரணைக்காக, அவரது மனைவி பாத்திமா சாதியா இன்று, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய போதே, இந்த இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதன்போது, அவரது நான்கு வயது பிள்ளையும் உடன் வந்திருந்ததாக செய்தியாளர் தெரிவித்தார்.
ஸஹ்ரானின் மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் இரகசிய காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ,கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்று அழைத்து வரப்பட்டிருந்தனர்.
மேலும், ஸஹ்ரானின் வீடு அமைந்திருந்த காத்தான்குடிப் பகுதியைச் சேர்ந்த இருவரும், இதன்போது சாட்சி வழங்குவதற்காக நீதவான் முன்னிலையில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Capital News –