ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று முற்பகல் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்துள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் அமைப்பாளர் பெசில் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அஸ்கிரிய மற்றும் மல்வத்து பௌத்த பீடங்களுக்கும் இவர்கள் சென்றிருந்ததுடன், மகாநாயக்க தேரர்களின் ஆசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
-Capital News –