in

எரிவாயுவின் விலைகளில் மாற்றம் ???

எரிவாயு விலைகளை அதிகரிக்கும் விலை திருத்தத்திற்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். உலகளாவிய எரிவாயு விலைகள் குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கிடையில், நாட்டின் இரண்டு உள்நாட்டு எரிவாயு நிறவனங்களும் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய அவசியம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உலக சந்தை விலைகளின்படி, உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விலையை குறைந்தபட்சம் ரூ .540 ஆக உயர்த்த வேண்டும் என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத் தலைவர் டபிள்யூ கே வெகாபிட்டி தெரிவித்துள்ளார். இதேவேளை எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் லிட்ரோ கேஸ் தலைவர் அனில் கொஸ்வத்தவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பொறுப்பை ஏற்றுக் கொண்டு பதவியை இராஜினாமா செய்யுங்கள்

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்கின்றன