in ,

குற்றவாளிகளை கண்டறியும் தேசிய அடையாள அட்டை இலங்கையில் அறிமுகம்

ஆட்பதிவுத் திணைக்களத்தினால் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து 16 மில்லியன் தேசிய அடையாள அட்டைகளை மீள் வௌியிடப் போவதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கைவிரல் அடையாளத்தை அடையாளங்காண உதவும் ஆவணங்களையும் இந்த அடையாள அட்டையில் இணைத்துக் கொள்ளவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய  அடையாள அட்டை பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாக அமையவுள்ளதாக ஆட்பதிவுத்  திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க குறிப்பிட்டார்,

பாதுகாப்பு முகவர்களுக்கு ஆட்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டைக்காக பெற்றுக் கொள்ளப்படுகின்ற கைவிரல் அடையாளங்கள் குடிவரவு  குடியகல்வு திணைக்களம் மற்றும் காவல்துறையில் சேமித்து வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள 14032 கிராம சேவகர் பிரிவுகளூடாகவும் நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இதன் போது மக்களிடமிருந்து கைவிரல் அடையாளங்களும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

மேலும் புதிய அடையாள அட்டைகள் பத்து ஆண்டுகளுக்கே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

-Capital News –

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கோத்தாபயவை இரகசியமாக சந்தித்தவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும்

மாத்தளை, வரகாமுறை கட்டார் வாழ் ஒன்றியத்தின் ஒன்றுகூடல்.