ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களுமான கபீர் ஹஷீம், சாகல ரத்னாயக்க ஆகியோர் கோத்தாபய ராஜபக்ஷவை இரகசியமாக சந்தித்தமைக்காக கட்சி ஆதரவாளர்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான நிரோஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தாம் பல வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முயற்சிக்கும் வேளையில் கட்சியின் பிரபல உறுப்பினர்கள் இவ்வாறு கோத்தாபய ராஜபக்ஷவை இரகசியமாக அவரது வீட்டில் சந்தித்துள்ளனர். இதனால் கட்சி ஆதரவாளர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே கட்சியின் மூத்த உறுப்பினர்களான குறித்த இரு அமைச்சர்களும் கட்சி ஆதரவாளர்களிடம் மன்னிப்பு கோரி ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னின்று செயற்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-DC-