இதனையும் தாண்டி, குறித்த காலப்பகுதியில், தற்கொலைகள் உள்ளிட்ட 16 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பல்கலைகழகங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு, சிரேஷ்ட மாணவர்களினால் உடல் மற்றும் பாலியல் ரீதியாக பகிடிவதைகள் செய்யப்படுதல் தற்போதைய நிலையில் அதிகரித்துள்ளதோடு, அதனால் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பகிடிவதை காரணமாக பல்கலைகழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைகளுக்கு முயற்சிக்கும் நிலைகளும் ஏற்படுகின்றன.
இதேவேளை, உளரீதியாகவும், உடல் ரீதியான பாதிப்புக்களுக்கும் மாணவர்கள் ஆளாவதாக பல்கலைகழக மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
-Capital News-