வடமேல் மாகாணம் குருநாகலை, இப்பாகமுவ வலையத்திற்கு உட்பட்ட பானகமுவ அந்நூர் மத்திய கல்லூரியில் இன்று பாடசாலைக்கான வெளிப்புற மதில் கட்டி திறந்து வைக்கப்பட்டது.
இவ்வருடம் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவ மாணவிகளால் குழுச் செயற்திட்டமாக முன்னெடுக்கப்பட்ட இந்த வேளைத்திட்டம் இன்று (2019.06.28) ஆசிரியர் அரூஸ் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வுகள் உத்தியோக பூர்வமாக காலை 10.30 மணியளவில் பாடசாலை அதிபரினால் ஆரம்பித்து, சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இன் நிகழ்வில் பாடசாலை அதிபர் இர்ஷாத், மற்றும் பிரதி அதிபர் நஸ்ருதீன், உயர் தர பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர்களான ராபி, சனூஸின், ஆசிரியைகளான ஆயிஷா, ரிஸ்னா ஆகியோர்களும், உயர் தர மாணவ, மாணவிகளும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் சிறப்புரையாக அதிபர் உரை இடம்பெற்றதோடு, வருகின்ற வருடம் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவன் ஒருவனின் பேச்சும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரசாத்
பானகமுவ செய்தியாளர்.