திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 115 மில்லியன் ரூபா செலவில் தோப்பூர் தி/மூ/பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கான வகுப்பறை மற்றும் விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (2019.06.26) கல்லூரியின் அதிபர் A.P.A.ஜப்பார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃறூப், சேருவில பிரதேச சபை உறுப்பினர் அலி , மூதூர் பிரதேச சபை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களான றயீஸ், தாஹிஸ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
உவைஸ் முஹமட் வசீம்
தோப்பூர் பிராந்திய செய்தியாளர்