தங்காலை, ஹுங்கம, குருபொகுண மீன்பிடி துறைமுகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தினால் 40 படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளன.
நேற்று இரவு 11.45 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்காலை நகர சபையின் தீயணைப்பு பிரிவு, ஹுங்கம பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீயிற்கான காரணம் உள்ளிட்ட மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-DC-