ஆசியாவில் கடந்த இரண்டு வருடங்களில் பத்திரிகை விற்பனை 5% வீழ்ச்சியைக் காட்டுகிறது. இந்தோனேசியாவில் அதிகம் விற்பனையாகும் பழைமையான பத்திரிகை KOMPAS, கடந்த தசாப்தத்தில், விற்பனையில் 7 இலட்சத்திலிருந்து 2 இலட்சமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
எது எவ்வாறாயினும் லக்பிம மூடப்பட்டமையானது, தகவல் அறியும் மக்களின் உரிமையில் குறிப்பிடத்தக்களவு பின்னடைவு என்றே கூற முடியும்.
இவ்வாறிருக்கையில், சமூகம் சார்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் பத்திரிகை வாழ்வா? சாவா? என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. விற்பனையில் எதிர்ப்பாராத வீழ்ச்சி, முறையற்ற திட்டமிடல்கள், நேர்த்தியற்ற நிர்வாகம், புதியவற்றை உள்வாங்கத் தவறியமை உள்ளிட்ட பல காரணங்கள் இங்கே முன்வைக்கப்படுகின்றன. இந்தப் பத்திரிகையை மூட வேண்டும் என்ற நிலைப்பாடு மேலோட்டமாக எழுந்துள்ளதுள்ளதுடன் தீவிரமாக பேசப்படுகிறது. ஆயினும் சமூகத்தைக் கருத்திற்கொண்டு சாதகமான தீர்மானங்களை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
-Copied –
−நிர்ஷன் இராமானுஜம்-