in

கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் அமைச்சுப் பதவிகள் ஏற்றுக் கொள்ளப்படுமா?

எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில், மீண்டும் பதவியேற்குமாறு பல தரப்பினரிடமிருந்தும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுக்கப்படும் நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
“நாங்கள் பதவி விலகும்போது அரசாங்கத்துக்கு பல கோரிக்கைகளை முன்வைத்தோம். அந்த கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக எம்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் தீர்வு பெற்றுத் தரவேண்டும்.
அத்துடன் குருணாகல், மினுவங்கொடை பிரதேசங்களில் இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுடன் நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தோம்.
அதேபோன்று இனவாத தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்கள் என கைது செய்யப்பட்ட 450க்கும் அதிகமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிறு சிறு காரணங்களுக்காக முஸ்லிம் மக்கள் கைது செய்யப்பட்டு பிணை வழங்க முடியாத வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தோம்.
வெறுப்பூட்டும் வகையில் பேசுவதற்கு எதிராக சட்டம் நிலை நாட்ட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தோம். இவை எதுவும் இன்னும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
-DC-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஏறாவூரில் முற்றாக எரிந்த முச்சக்கர வண்டி.

கிழக்குமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு இரண்டாம்கட்ட நியமனமும் வழங்கப்படும் –இம்ரான் எம்.பி