ஏறாவூரிலிருந்து பெரிய புல்லுமலை – வெலிக்காகண்டி குளக்கட்டுக்குச் சென்ற முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்த சம்பவம் இன்று (16) இடம் பெற்றுள்ளது.
ஏறாவூரிலிருந்து பெரிய புல்லுமலை – வெலிக்காகண்டி குளக்கட்டுக்குச் சென்ற குடும்பத்தினரை இறக்கி விட்டு திரும்பிவரும் வேளையிலேயே இத்தீப்பிடித்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும், இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி உடனடியாக பாய்ந்து வெளியேறியதால் அவருக்கு எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக தப்பியதாகவும் வண்டியின் சாரதி தெரிவித்தார்.
இத்தீப்பிடிப்புச் சம்பவம் அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருந்தும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முஹம்மட் அஸ்மி –