in ,

அன்வர் கிண்ணத்தை சுவீகரித்தது ஈஸ்ட் லங்கா அணி

கோல்ட் ஸ்டார் அணி தனது 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய 20 ஓவர்கள் கொண்ட அன்வர் கிண்ண கடின பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் ஆட்டம்நேற்று (2019.06.14) தோப்பூர் M.H.M.அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இப் போட்டிக்கு பிரதம அதிதியாக முன்நாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் R.M.அன்வர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

இவ் இறுதிச்சுற்றுப் போட்டியில் ஈஸ்ட் லங்கா மற்றும் நியூ ஸ்டார் ஆகிய அணிகள் மோதின.  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூ ஸ்டார் அணி கலத்தடுப்பை தீர்மானித்தது .முதலில் துடுப்பெடுத்தாடிய ஈஸ்ட் லங்கா அணியினர் 19 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். தெளசீர் 47 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

125 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூ ஸ்டார் அணியினர் சகல ஓவர்களும் முடிவடைந்த வேளையில் 5 விக்கட்டுக்களை இழந்து 105 ஓட்டங்களை பெற்று தோல்வி அடைந்தனர்.
ஈஸ்ட்லங்கா அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.  ஆட்ட நாயகனாக தெளசீர் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

உவைஸ் முஹமட் வசீம்
தோப்பூர் பிராந்திய செய்தியாளர்

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அநீதிக்காக குரல் கொடுக்க முன் வாருங்கள். – ஹரீஸ் எம்.பி. யின் அவசர வேண்டுகோள்…

ஏறாவூரில் முற்றாக எரிந்த முச்சக்கர வண்டி.