in ,

அநீதிக்காக குரல் கொடுக்க முன் வாருங்கள். – ஹரீஸ் எம்.பி. யின் அவசர வேண்டுகோள்…

முஸ்லிம்களுக்கு  எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும்..!

தென்னிலங்கை அரசியல் தலைவர்களுக்கு ஹரீஸ் எம்.பி.யின் அவசர வேண்டுகோள்.

தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தின் குறைகளை மாத்திரம் விமர்சித்துக் கொண்டிருக்காமல் முஸ்லிம்களுக்கு  எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிக்காகவும் குரல்கொடுக்க முன் வர வேண்டும்.

இனங்களுக்கிடையில் பரஸ்பர நல்லுறவு இருந்தால்தான் நாட்டின் பொருளாதாரதத்தை கட்டியெழுப்பலாம் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் தென்னிலங்கை அரசியல் தலைமைகள் முஸ்லிம்கள் தொடர்பாக கடைப்பிடித்து வரும் நடவடிக்கை தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் தென்னிலங்கை அரசியல் தலைமைகளின் பேச்சுக்கள் முஸ்லிம் மக்களுக்கு அறிவுரை செய்வதிலும் அவர்களின் கலாசாரம் மற்றும் ஆடைகள் தொடர்பாக விமர்சிப்பதிலுமே இருக்கின்றன.

ஆனால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் கெடுபிடிகள் தொடர்பாக குரல் கொடுப்பதை மிகவும் குறைவாகவே பார்க்கின்றோம். அது மிகவும் துர்ப்பாக்கியமான நிலையாகும்.

ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் ஞானசார தேரர் போன்றவர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் தலைமைகள் தெற்கில் இருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை தட்டிப் பேசக்கூடியவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது இவர்களும் முஸ்லிம்களின் செயற்பாடுகள், நடை, உடைகளில் குறை காண்பதிலே இருக்கின்றனர்.

 இது முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு வகையில் மன அழுத்தத்தை கொடுக்கும் வகையிலே இருக்கின்றது என்கிறார் ஹரீஸ் எம்.பி.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமனம்.

அன்வர் கிண்ணத்தை சுவீகரித்தது ஈஸ்ட் லங்கா அணி